எங்களைப் பற்றியது
எங்களுடைய மீளாய்வு
தேசிய மற்றும் சர்வதேச இலத்திரனியல் வலையமைப்புக்களுடன் உயர் தகவல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்புச் செய்வதன் ஊடாக சுகாதாரம், கல்வி, நலன்புரி மற்றும் அரச சேவைகள் மற்றுமல்லாது தொழில்முயற்சித் துறைகளின் வினைத்திறனான முகாமை தொடர்பாக டிஜிடல் நல்லாட்சிக் சேவைகளை தாபித்தல்.
விடயங்கள் மற்றும் தொழிற்பாடுகள்
“சுபீட்சத்தின் செயற்பணி மற்றும் தொலைநோக்கு” : கொள்கை கூற்றுக்கு இணங்க மற்றும் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய கொள்கைகளின் அடிப்படையில் மேற்படி சனாதிபதி செயலணிகளின் உதவிகளை பட்டியட்படுத்தி, மற்றும் உரிய அமைச்சுக்கள் மற்றும் பிரயோகிக்கத்தக்க சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க, எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைந்து கொள்ளும் முகமாக திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றுமல்லாது சனாதிபதி செயலணியின் கீழ் வழிநடத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் கண்காணித்தலின் ஊடாக மக்கள் மைய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை உருவாக்குதல் மற்றும்.
விசேட முன்னுரிமைகள்
அரச பொறிமுறை மற்றும் சந்தை துண்டங்களின் செயற்பாடுகளை இலகுபடுத்துவதன் ஊடாக வினைத்திறனான மற்றும் மக்களை மையப்படுத்திய சேவைகள் மற்றும் அறிவுப் பரிமாற்றம் தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு கருவியாக டிஜிடல் நல்லாட்சியை விரிவுபடுத்தல்.
சர்வதேச இ – வர்த்தகம் மற்றும் சர்வதேச இலத்திரனியல் கொடுப்பனவு முறைமைகளை நிறுவுதல்.
நாடு தழுவிய உயர் வேக தரவு பரிமாற்ற முறைமை மற்றும் தொடர்புடைய கையடக்க தொலைபேசி வலையமைப்பை தாபித்தல்.
தரவுப் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் புலமைச் சொத்து உரிமை தொடர்பாக புதிய சட்டங்கள் மற்றும் நிறுவன வேலைச்சட்டகமொன்றை அபிவிருத்தி செய்தல்.
சூழல் கூருணர்வு, தகவல் தொழில்நுட்பம், அறிவு மற்றும் திறன்கள், சுகாதாரம், சுற்றுலா மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் இலங்கையின் தனித்துவத்தை வெளிப்படுத்தி, டிஜிடல் நல்லாட்சி மற்றும் நிறுவன கட்டமைப்புக்குத் தேவையான சட்ட முறைமை மற்றும் ஒழுங்குபடுத்தல் வேலைச்சட்டகமொன்றை அறிமுகம் செய்தல்.
தேசிய பொருளாதாரத்தின் அறிவு மற்றும் தொழில்தேர்ச்சி சேவை பங்களிப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஏற்றுமதி பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கு தொழில்முயற்சி அபிவிருத்தி தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் தொடர்புடைய சேவைகளை விஸ்தரிப்புச் செய்வத்ன ஊடாக தொழில்நுட்ப தொழில்முயற்சி பொருளாதாரத்தை நோக்கி நிலைமாற்றம் அடைதல்.
தொழில்நுட்பத்தை இலக்காக்க் கொண்ட முதலீடுகள், தொழில்முயற்சிகள், வியாபாரங்கள் மற்றும் இணைந்த சேவை கைத்தொழில்களுக்கான நிலைமாற்றத்தின் ஊடாக இளைஞர்களுக்கான உயர் வருமான உழைக்கின்ற வேலைகளை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப பூங்காக்களின் தாபிப்பு.