இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI)
இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) இலங்கையின் தேசிய தரப்படுத்தல் நிறுவனமாகும். இது 1964ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க இலங்கை தரப்படுத்தல் பணியக சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க இலங்கை தரப்படுத்தல் நிறுவக சட்டத்தினால் அகற்றப்பட்டு பதலீடுசெய்யும் வரைக்கும் இந்த நிறுவகம் இலங்கை தரப்படுத்தல் பணியகம் என்ற பெயரில் இயங்கியது. இந்த நிறுவகம் தற்பொழுது விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சரின் கீழ் இயங்குகின்றது. அத்துடன் மேற்குறிப்பிடப்பட்ட சட்டத்தின் நியதிகளின் கீழ் அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஒரு சபையினால் நிர்வகிக்கப்படுகிறது.
இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) இலங்கையில் தேசிய தரப்படுத்தல் நிறுவனமாக ஒழுங்குமுறையாக செயற்படுகின்ற அதேவேளையில் அது ஜெனீவாவில் தலைமை நிலையம் அமைந்துள்ள சர்வதேச தரப்படுத்தல் அமைப்பின் (ISO) அங்கத்தவராக இருக்கின்றது. சர்வதேச தரப்படுத்தல் அமைப்பின் (ISO) அங்கத்தவர் என்றவகையில், தேசிய நிறுவனங்கள் அவர்களின் தேசிய தரங்களின் பிரதிகளை பரஸ்பரம் கொடுக்கும் வாங்கும் அடிப்படையில் பரிமாறிக்கொள்கின்றன. அத்துடன் தேசிய மட்டத்தில் தரங்கள், தொழில்நுட்ப ஒழுங்குவிதிகள் மற்றும் தரங்களுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட தகவல்களை சமூகத்திற்குப் பரப்பும் பொறுப்பையும் வகிக்கிறது.
இணையதளம்: https://www.slsi.lk