தித்வா சூறாவளிக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரம் மற்றும் கல்வியை மையமாகக் கொண்டு, இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சியை ஆதரிப்பதற்காக டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி 420 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டதன் மூலம் இந்த உறுதிமொழி முறைப்படுத்தப்பட்டது.
தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப இந்த மீட்பு முயற்சிகளை செயல்படுத்த அரசாங்கத்திற்கும் டயலொக்கிற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகுக்கிறது.
இந்த கூட்டாண்மையின் கீழ், சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனை, கொத்மலை பிரதேச மருத்துவமனை, மதுல்கேலே பிரதேச மருத்துவமனை மற்றும் புத்தளம் அடிப்படை மருத்துவமனை ஆகியவற்றில் வசதிகளை மீட்டெடுப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் டயலொக் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து செயல்படும். புயலால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கணினி ஆய்வகங்களை புதுப்பித்து, மாணவர்கள் ICT தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வசதிகளை , அவர்களின் கல்வியைத் தொடரவும் உதவும் வகையில், டயலொக் கல்வி அமைச்சகத்துடன் கூட்டு சேரும்.
கௌரவ பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, கௌரவ. டிஜிட்டல் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, அமைச்சு செயலாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் டயலொக் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.











































Rebuilding மீண்டும் கட்டியெழுப்பும் நிதி
மேலும் தகவலுக்கு, அழைக்கவும்
உள்ளூர்: 1800
சர்வதேசம்: +94 112001800
Google நிறுவனத்துடன் இணைந்து, டிஜிட்டல் பொருளாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், சாலை மேம்பாட்டு ஆணையம் தற்போது A மற்றும் B தர சாலை அமைப்பைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கூகிள் நிறுவனம் சாலை மேம்பாட்டு ஆணையத்திற்கு கூகிள் GMCP (google Map content partner) அந்தஸ்தை வழங்கியுள்ளது, இது சாலை மேம்பாட்டு ஆணையம் இந்தப் புதுப்பிப்புகளைச் செயல்படுத்த உதவியுள்ளது.
இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, பிற சாலை அமைப்புகளும் விரைவில் புதுப்பிக்கப்படும்.